மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம்

0
438

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்த குறைபாடு இருந்ததால் சிவகாசி ரத்த வங்கியில் இருந்து ரத்தம் கொண்டு வரப்பட்டு ஏற்றப்பட்டது. அதன் பிறகு அவருக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்பட்டது.

பரிசோதனை செய்தபோது, அந்த பெண்ணுக்கு HIV-யால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்ட சுகாதாரத் துறை உத்தரவின் பேரில், சிவகாசி ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here