பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன்

0
244

பெங்களூருவைச் சேர்ந்த உத்தம் என்ற 25 வயது இளைஞர் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் தனது தாயிடம் குடிப்பதற்கு அடிக்கடி பணம் கேட்டு வாங்குவார்.

இந்நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த உத்தம் தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவனது தாய் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த உத்தம் தனது தாய் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உத்தம் தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புகாரின் பெயரில் தலைமறைவாக இருந்த உத்தமை போலீசார் கைது செய்தனர்.

குடி போதையில் பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.