கீரை வகைகளும் அதன் பயன்களும்

0
59

முருங்கைக்கீரை – நீரிழிவை நீக்கும்,
கண்கள், உடல் பலம் பெறும்.

வல்லாரைக் கீரை – மூளைக்கு பலம்
தரும்.

முடக்கத்தான் கீரை – கை, கால்
முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

புண்ணக்கீரை – சிரங்கும், சீதளமும்
விலக்கும்.

புதினாக் கீரை – ரத்தத்தை சுத்தம்
செய்யும், அஜீரணத்தை போக்கும்.
மாலைக்கண் நோயை விலக்கும்,
ஆண்மை பலம் தரும்.

மணலிக் கீரை – வாதத்தை விலக்கும்,
கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை – வாய் மற்றும்
வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல்
போக்கும்.

முளைக்கீரை – பசியை ஏற்படுத்தும்,
நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை – தாது
விருத்தியாகும்.

வெந்தயக்கீரை – மலச்சிக்கலை
நீக்கும், மண்ணீரல், கல்லீரலை
பலமாக்கும். வாத, காச நோய்களை
விலக்கும்.

தூதுவளை – ஆண்மை தரும். சரும
நோயை விலக்கும். சளித்தொல்லை
நீக்கும்.

தவசிக் கீரை – இருமலை போக்கும்.

சாணக் கீரை – காயம் ஆற்றும்.

வெள்ளைக் கீரை – தாய்ப்பாலை
பெருக்கும்.

விழுதிக் கீரை – பசியைத் தூண்டும்.

கொடிகாசினி கீரை – பித்தம்
தணிக்கும்.

துயிளிக் கீரை – வெள்ளை வெட்டை
விலக்கும்.

துத்திக் கீரை – வாய், வயிற்றுப்புண்
அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக் கீரை – மூலநோயை
போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்குதட்டை கீரை – சளியை
அகற்றும்.

நருதாளி கீரை – ஆண்மையைப்
பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here