பலமான இருதயம் பெற இதை சாப்பிடுங்கள்

வெள்ளைத் தாமரைப் பூவின் இதழ்களை மாத்திரம் கஷாயம் வைத்து கட்டி, பாலுடன் கலந்து, காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.

அடிக்கடி நெஞ்சுலவி ஏற்படுகிறதா? விளாம்பழம் சாப்பிட்டு வர குணம் தெரியும்.

வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுத்தால்கூட இதை சாப்பிட்டு குணம் அடையலாம்.

கேழ்வரகை மேற்புறம் கருகும் வண்ணம் வறுத்து, மாவரைத்து பானம் தயாரித்துப் பருகலாம். இதிலுள்ள தாமிரச்சத்து, இருதயத்தை பலப்படுத்தும்.

நெல்லிக்காய்ச் சாற்றில் கொஞ்சம் பசு நெய்யைக் கலந்து, காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வாருங்கள். இருதயம் பலமாவதுடன் உடலும் பலப்படும்.

ஒரு ஸ்பூன் துளசி சாறுடன், சம அளவு தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட இருதயம் பலப்படும்.

இரவில் பால் சாப்பிடும் பொழுது, ஒரு சிட்டிகை கடுக் காய்ப் பொடியைக் கலக்கிச் சாப்பிட இருதயம் பலப்படும். இருதய சம்பந்தமான எந்த நோயும் வராது.

இரவு படுக்கைக்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் , ‘தேனையும் எலுமிச்சம் பழச் சாற்றையும் கலந்து அருந்தி வர, இருதயத்தின் பலவீனமும் இரத்தக்குழல் பலகீனமும் குணமாகும்.

What do you think?

20 points
Upvote Downvote

One Comment

Leave a Reply

One Ping

  1. Pingback:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நவக்கிரக தோஷங்களை போக்கும் இடைக்காடர் சித்தர் கோவில்

20 Best Amazing Picture Collection