சுவையான பூண்டு மிளகு குழம்பு செய்வது எப்படி?

0
284

தேவையானவை

தோல் உரித்த பூண்டு பல் – 10,
மிளகு – 20,
சின்ன வெங்காயம் – 1,
கிடளுத்தம்பருப்பு,
துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு,
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

செய்முறை

பூண்டுப் பல்லை சிறிது எண்ணெயில் லேசாக வதக்கி, வேக வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, துவரம்பருப்பு,காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து, புளி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

கடாயில் கடுகு தாளித்து, அரைத்த விழுது, வேக வைத்த பூண்டு,சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு : பூண்டு வாயுத் தொல்லையை நீக்கும். மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும்.