கட்டிப்பிடி வைத்தியம் என்கிற வார்த்தை கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா’ படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமான வார்த்தையாக உள்ளது.
ஆனால், உண்மையில் கட்டிப்பிடித்தல் மூலம் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளுவது மட்டுமில்லாமல், அதில் மிகப்பெரிய மகத்துவம் இருக்கிறதாம்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் மிக்கல் மெர்ஹ்பி கட்டிப்பிடி வைத்தியத்தை பற்றி ஒரு ஆய்வு நடத்தியுள்ளார். இதற்கு 404 ஆண்களை பயன்படுத்தியுள்ளார்.
இந்த ஆய்வின் மூடிவில் யார் ஒருவர் பிறரை அன்போடு கட்டிப்பிடிக்கிறார்களோ அவர்களின் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்களை இந்த வைத்தியம் உருவாக்கியிருக்கிறது.
அதேபோல், இரவில் கட்டிப்பிடிக்கும் போது நேர்மறையான எண்ணங்களை அவர்களின் மனதில் உருவாக்கி, இருவருக்கும் இடையேயான உறவினை சுமூகமாக்குகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கட்டிபிடி வைத்தியத்தால் உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பலசாலிகளாக மாறுகின்றனர். மேலும், தனக்கென ஒர் உறவு இருக்கிறது என்ற நம்பிக்கையும் பிறந்து வாழ்வும் சிறக்கிறது.
இந்த கட்டிப்பிடி வைத்தியம், மனிதர்களிடம் மட்டுமல்ல, விலங்குகள் உலகத்திலும் மகிழ்ச்சியை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.