வீட்டை வாடகைக்கு விடும் பழக்கம் எப்போது ஆரம்பித்தது தெரியுமா?

0
401

அந்தக் காலத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பேரன் பேத்தி அவர்களின் வாரிசுகள் என எத்தனை பேர் இருந்தாலும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்வதே வழக்கம்.புதிதாக யாராவது கிராமத்துக்கு வருகிறவர்கள் அல்லது ஊர்விட்டு ஊர் வரும் தெரிந்தவர்கள், உறவினர்கள் தங்களுக்கு இருக்கும் இன்னொரு வீட்டில் தங்கச் சொல்வார்கள். அதற்காக வாடகை பணம் எதுவும் வாங்குவதில்லை.

இன்று கிராமங்களில் கூட இதுபோல யாருக்காவது தங்குவதற்கு வீடு தந்தால் வாடகைக்குத்தான் தருகிறார்கள்.நகரங்களில் கேட்கவே வேண்டாம். இப்படி உலகம் முழுவதும் இருக்கும் வீட்டை வாடகைக்கு விடும் பழக்கம் எப்போது ஆரம்பித்தது தெரியுமா? ரோமானியர்கள் தான்.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இந்த வழக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இந்த ரோமானியர்கள் வீடுகளை கட்டி அந்த ஏரியாவில் வீடு இல்லாதவர்கள் தங்குவதற்கு அதை வாடகைக்கு விடுவதை வாடிக்கையாக்கினார்கள்.

குடும்ப வாழ்வை மனதில் கொண்டு ஒரு குடும்பம் வசிக்க 3 மாடியில் வீடு கட்டி வாடகைக்கு விடுவார்களாம்.இப்படி இருக்க கூடாது அப்படி இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு மத்தியில் இந்த செய்தி பெருமூச்சுதான் வரவழைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here