ஹோட்டல் சாம்பார் எப்படி செய்வது?

0
384

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 1கப்
பாசிப்பருப்பு – அரை கப்
நறுக்கிய கேரட் -1 கப்
அவரை – 1 கப்
முருங்கை – 1 கப்
மஞ்சள் பூசணி துண்டுகள் – 1 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

வறுத்து பொடிக்க

தனியா – 2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
வெந்தயம் – கால் டீஸ்பூன்

இவை அனைத்தையும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து பொடித்துக்கொள்ளவும்.

செய்முறை

பருப்புடன் மஞ்சள் தூள், காய்கறிகள் சேர்த்து வேக விடவும், ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, தாளித்து அதை வேக வைத்த பருப்புடன் சேர்க்கவும்.

பிறகு வறுத்த பொடியை அதில் போட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஹோட்டல் சாம்பார் ரெடி. இது இட்லி, வடை, தோசைக்கு பொருத்தமாக இருக்கும். தேவைப்பட்டால் இதில் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.