ருசியான கொத்தவரங்காய் பருப்பு உசிலி

0
257

கொத்தவரங்காய் பருப்பு உசிலி

தேவையானவை:

கொத்தவரங்காய் – கால் கிலோ
கடலைப்பருப்பு – 150 கிராம்
துவரம்பருப்பு – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 2
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கடுகு – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – 100 மில்லி
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை ஊற வைத்து களைந்து கெட்டியாக அரைத்து, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்த பருப்பு சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை மிதமான தீயில் வைத்துக் கிளறி, வேக வைத்த கொத்தவரங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: பருப்புக்கு பதில் கொள்ளு ஊற வைத்தும் இதேமுறையில் தயாரிக்கலாம்.