இராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே காண வேண்டிய இடங்கள்

0
483

1.உச்சினி மாகாளி அம்மன் சன்னதி : அக்னிதீர்த்தத்தின் அருகில் காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் மடத்துக்கு தென்புறம் அமைந்துள்ளது.

2. கோட்டை முனீஸ்வரர் சன்னதி : இது இத்திருக்கோவில் தெற்கு கோபுர வாசல் எதிரில் உள்ளது.

3. பத்ரகாளி அம்மன் கோவில் : இது நகரின் வடபகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்தது. இங்கு விரதம் இருந்து மனசுத்தியுடன் அம்மனை வழிபட்டால் சகலதோஷங்களும் நிவர்த்தி ஆகி சுகவாழ்வு அடையலாம்.

4. நம்புநாயகி அம்மன் : இத்திருக்கோவிலைச் சேர்ந்த உபகோவில். இங்கு திருமணமாகாத கன்னிப் பெண்கள் விரதமிருந்து அம்மனை வழிபட்டால் திருமணம் கைகூடும். மேலும் இத்திருக்கோவிலில் சித்தப் பிரமை, பேய்கோளாறு போன்றவை ஏற்பட்டுள்ளவர்கள் இக்கோவிலில் தங்கி 45 நாட்கள் விரதம், நோம்பு இருந்தால் அவர்களது துயரங்கள் நீங்கி சுகமடைவார்கள்.

கிழக்கில் உச்சினிமாகாளி அம்மன், தெற்கே கோட்டை முனீஸ்வரர், வடக்கே பத்திரகாளி அம்மன், மேற்கே நம்பு நாயகி அம்மன், இரட்டை தலை முனீஸ்வரர் ஆகியவை எல்லை தெய்வங்களாகும்.

5. அனுமகுண்டம் : இது பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ளது. இராமனால் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைச் சுற்றித்தான் கொணர்ந்த லிங்கத்தை ஸ்தாபிக்க விருமாய ஆஞ்சநேயர் ராமரால் உண்டாக்கப்பட்ட லிங்கத்தை தன் வாலினால் சுற்றி அகற்ற முயன்றார். அம்முயற்சியில் தோல்வியுற்று வால் அறுந்து விழுந்த இடம். இங்கு மட்டும் முழுவதும் சிவப்பாக காட்சியளிப்பது விசேசம்.

6. காஞ்சிகாமகோடி மடம் : இது அக்னி தீர்த்தக்கரையில் அமைந்துள்ளது.

7. கந்தமாதன பர்வதம் : இது ராமேஸ்வரம் பாம்பன் செல்லும் ரஸ்தாவில் கடை வீதியிலிருந்து வடக்கே பிரிந்து செல்லும் ரஸ்தாவில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறுகுன்று. இங்கு உயரமான இடத்தில் மண்டபம் ஒன்று உள்ளது. இது ஸ்ரீராமரின் படைவீடாக இருந்தது. இந்த குன்றில் உள்ள மண்டபத்தின் உச்சியில் ஏறிநின்று பார்த்தால் தீவு முழுவதையும் காண்பதோடு மட்டுமல்லாது, பாம்பன் வரையில் உள்ள ரயில்வே பாலம் (பாம்பன் பாலம்) ரோடும் பாம்பன் லைட் ஹவுஸ் மற்றும் நகரின் அழகிய தோற்றத்தையும் தீவின் சில பகுதிகளையும் காணலாம்.