பெண்களால் அந்த ஆசையை மட்டும் கட்டுபடுத்தவே முடியாதாம், அவைகள்…

0
555

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் பல்வேறு ஆசைகள் வருவது சாதாரணமான விஷயம்தான். ஆனால் பெண்களால் தங்களது ஆசையையும், உணர்ச்சியையும் கட்டுப்படுத்த முடியாது என அர்த்தசாஸ்திரம் கூறுகிறது.

பெண்களின் காதலும் அப்படித்தான். தனது துணையின் மீதான காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அதேபோல், தனது துணையும் தன்னைப்பற்றி கூறவேண்டும் என அதிகம் எதிர்பார்பார்கள். அவ்வாறு பெண்களால் கட்டுப்படுத்த முடியாத சில ஆசைகள் பற்றிக் இப்போது காணலாம்.

நீ ரொம்ப அழக இருக்க…

பெண்களுக்கு தங்களைப்பற்றி தன்னவன் புகழ்ந்தால் மிகவும் பிடிக்கும். நீ அழகாய் இருக்கிறாய், இந்த ஆடை உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது, இது போன்ற சில புகழ்ச்சிகள் அவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். இதற்கு சமமான மகிழ்ச்சியும் திரும்ப கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

romantic

நீயில்லையேல் நானில்லை

தன்னவன் தன்னை மட்டுமே உலகமாக கருதவேண்டும் என்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும். ஒரு நாளைக்கு ஆயிரம் முறை ஐ லவ் யூ கூறினாலும், அதனை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதே போல் மணிக்கணக்கில் மனம்விட்டு பேசுவதும் மிகவும் பிடித்த ஒன்று.

அவன் தோள் என்றும் எனக்கே…

எத்தனை மணி நேரம் தன்னவனின் தோளில் சாய்ந்திருந்தாலும் அதனை மீண்டும் மீண்டும் அவர்கள் மனம் எதிர்பார்க்கும். மேலும், தன்னவனின் தோளில் சாய தனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று உரிமைக் கொண்டாடுவார்கள்.

தலை முடி உதிர்வதை கூட….

பெண்களுக்கு தன்னவன் அருகில் இருக்கும் போது தலைகோதி வருடுவது மிகவும் பிடித்த விசயமான ஒன்று. அதேபோல் தன்னவனையும் தன் மடியில் சாய்த்துக்கொண்டு முடியை வருடிக்கொடுப்பதும் பிடித்த ஒன்றாகும்.

இவையெல்லாம் அனைத்து பெண்களுக்கும் இருக்கும் சில பொதுவான ஆசைகள் என்பது குறிப்பிடத்தக்கது.