சூரிய வழிபாடு பற்றி சில தகவல்

0
428

சூரியதேவன் வழிபாடு உலகம் தோன்றிய பொழுதிலிருந்து, சூரிய வழிபாடு இருந்துவந்துள்ளது. மனிதன் முதன் முதலில் தன் கண்ணுக்குத் தெரிந்த, தேஜஸ் பொருந்திய சூரியனைத்தான் கடவுளாக வழிபட்டிருக்கிறான்.

ஆகாயம் முழுவதும் பிரகாசிக்கிற சூரிய கிரகணத்தைப் பார்த்து அதிசயித்து, அது பூமிக்குத் தரும் வெளிச்சம், நீர், காற்று, ஆகாரம், வளங்களைக் கண்டு, மிகபலம் பொருந்திய சக்தியாக, தெய்வமாக சூரியனை வழிபட்டு வந்திருக்கிறான்.

ஷண் மதத்தில் ஒன்றான செளரத்தில் மட்டுமின்றி, இந்து மதத்தின் சமயங்களான புத்தம் மற்றும் சமணத்திலும் சூரிய வழிபாடு இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி, இலங்கை, இந்தோனேஷியா, சீனம், கிரேக்கம்,பாரசீகத்திலும் சூரிய வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகிறது.

ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஒரிசா, ஜார்கண்ட், வடகிழக்கு மாகாணங்களில் சூரியதேவன் வழிபாடு இருந்ததற்குச் சான்றாக, புராதனமான சூரியனார் கோயில்கள் இங்கெல்லாம் இருக்கின்றன.

ஒரிசாவின் கோனார்க் கோயில் கட்டப்பட்டதென்னவோ 13-ம்நூற்றாண்டில்தான். ஆனால், அதற்கும் முன்னதாகவே பல சூரியனார் கோயில்கள் இந்தியாவில் கட்டப்பட்டுள்ளன.

குஜராத், மொதேராவில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரியனார் கோயிலும், கும்லியில் 8-ம் நூற்றாண்டிலும் கட்டப்பட்ட நவலுக (நவ.உலக) சூரியனார் கோயிலும், இதற்கு உதாரணங்கள். இங்கெல்லாம் இன்று வரை பூஜைகள் நடைபெற்று ,வருகின்றன.