முகம் பளபளப்பாக மாற இயற்கை முறையில் டிப்ஸ்

0
637

வழுக்கைத் தேங்காயை நன்கு அரைத்து அதனுடன் சிறிதளவு இளநீர்
கலந்து முகத்தில் கீழிருந்து மேல்நோக்கிப் பூசி, உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம்
செய்ய வேண்டும். இப்படித் தினமும் செய்து வந்தால் மாசு மருவின்றி முகம்
மிளிரும், கரும்புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல்
போய்விடும்.

வெயில் காலங்களில் சூரிய ஒளிபட்டு முகம் கருப்பாவது வழக்கம்.பலருக்கு வெளியூர் சென்றால் கூட இதுபோன்ற நிலை ஏற்படும். தேங்காய்ப் பால் இரண்டு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து பசைபோலாக்க வேண்டும். இந்தப் பசையை முகத்தில் பூசிக் கொண்டு உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். வாரம் இருமுறை இப்படிச் செய்தால் முகம் பிரகாசமாகும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் விழுது, அரை ஸ்பூன் பால் பவுடர், அரை ஸ்பூன் பார்லி பவுடர் கலந்து முகத்தில் தேய்க்க முகம் பளபளப்பாகும்.

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்துப் பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும்.

ஒரு கப் தயிருடன் வெள்ளரிச்சாறு கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும்.

தேன் ஒரு டீஸ்பூன், தக்காளிச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூச, கருமை நிறம் மாறி முகம் பளபளக்கும்.

பால் பவுடர் – ஒரு டீஸ்பூன்,
தேன் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்,
பாதாம் எண்ணெய் – அரை டீஸ்பூன்

இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். முகத்தை நன்றாகக் கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து, பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர
இவ்வாறு தொடர்ந்து இரு வாரங்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும்.

வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாகப் பிசைந்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here