ஆண்மை அதிகரிக்க உதவும் வீட்டு உணவுகள்

0
986

மாதுளை ஜூஸ், முருங்கைக்கீரை சூப், முருங்கைக் காய், பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய்ப் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு இது புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.

நாட்டுக்கோழி இறைச்சி காமத்தைப் பெருக்கும். முருங்கைக்கீரை, தூதுவளைக் கீரை, பசலைக் கீரை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை பருப்பு, தேங்காய்த் துருவல், கொஞ்சம் நெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும்.

5 அல்லது 6 முருங்கைப் பூக்களுடன் பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரப்பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து குடித்தால், உயிரணுக்களின் உற்பத்தியும், இயக்கமும் அதிகரிக்கும்.

வாழைப்பழம், போலிக் அமிலம் கொண்ட ஸ்ட்ராபெரி, மாதுளம் பழம் தாம்பத்தியத்திற்கு நல்லது. நல்லெண்ணெய் குளியல் பித்தத்தைச் சீராக்கி, விந்து அணுக்களைப் உயர்த்தும்.

சுறா மீன், காடை மற்றும் நண்டு போன்ற உணவுகளை உண்ணலாம். இதில் ஆண்மையை அதிகரிக்கும் பல தாதுப் பொருட்கள் அடங்கியுள்ளது.

நீச்சல் பயிற்சி ஆண்மையை பெருக்க உதவும். குடி பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அழகான தாம்பத்திய உறவிற்கு உடல் உறுதி மட்டுமல்ல, மன உறுதியும் தேவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.