மசாலா டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

0
486

இந்தியாவில் பலருக்கும் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. சிலருக்கு சாதாரண டீயை விட மசால் டீ என்றால் மிகவும் பிடிக்கும்.

மசாலா டீ மாலைநேரத்தில் குடிப்பது மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருக்கும். மசாலா டீ குடிப்பதால் உடம்பில் உள்ள கலோரிகள் குறைகிறது.

சளிக்கு மசாலா டீ சிறந்த மருந்தாகும். உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது சளியால் அவதிப்பட்டு கொண்டிருந்தால், அவர்களுக்கு மசாலா டீ போட்டுக் கொடுங்கள். சிறிது நேரத்தில் குணமாகிவிடும். மசாலா டீ குடிப்பதன் மூலம் உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கம் குணமாகிறது. மேலும் செரிமானத்தை சீராக்குகிறது.

மசாலா டீ வாயுக் கோளாறுகளை சரி செய்ய பயன்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மசாலா டீ குடிப்பதால் உடலில் உள்ள இன்சுலின் அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

மாதவிடாயின் போது பெண்கள் மசாலா டீ குடித்து வந்தால் அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி குறையும். மசாலா டீ தொடர்ந்து குடித்து வந்தால் முதுகு வலி, மூட்டு வலி ஆகியவை குறையும். மசாலா டீ ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

தேநீரைப் பற்றி சில உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்