தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை ரஜினி ஓபன் டாக்

0
213

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் தர்பார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், “தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை” என கூறியுள்ளார். இந்த விசயத்தை பெரிது படுத்தி எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்துவிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

நதிகளை இணைக்க வேண்டும் என நீண்ட காலமாக கூறி வருகிறேன். நதிநீர் இணைப்புக்கு பகிரத் யோஜனா என்று பெயர் வைக்கும்படி முன்பே வாஜ்பாயுடன் பேசியிருந்தேன். தேர்தலில் மக்கள் என்ன மாதிரியான தீர்ப்பு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்பு செய்ய வேண்டும். அப்படி செய்தால் நாட்டில் பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும். குறிப்பாக வறுமை ஒழியும் என தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் லோக்சபா தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்டதாகவும், அதற்கு அவரும் ஆதரவு தருவதாகவும் கமல் கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி மீண்டும் தெளிவாகக் கூறியுள்ளார். இதனால் கமல் மட்டுமல்ல மற்ற கட்சியினரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here