வாட்ச்மேன் திரை விமர்சனம்

0
413

இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த ஆண்டின் மூன்றாவது திரைப்படம் வாட்ச்மேன். கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகி உள்ளார். ஜிவி பிரகாஷ் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அப்பா, அம்மா மற்றும் அவருடைய நண்பர் யோகிபாபு என மூன்று பேர் அவருடன் இருக்கிறார்கள்.

ஹீரோவுக்கு தொழிலில் சிறிய நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நிலையில் பணக்கார வீட்டுப் பெண்ணான சம்யுக்தாவின் மீது காதல் ஏற்படுகிறது. காதலியால் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் பிறகு ஏற்படும் பண பிரச்சனைகளை சமாளிக்க திருட்டில் ஈடுபடுகிறார்.

ஒரு பெரிய பங்களாவில் திருட முயன்ற ஜிவி பிரகாஷ், அந்த பங்களாவின் காவலாளியான நாய் இவரை பிடித்து விடுகிறது. அந்த பங்களாவில் எதிர்பாராத பயங்கர சம்பவங்கள் நடைபெறுகிறது. இதில் மாட்டிக்கொண்ட ஜீவி பிரகாஷ், அந்த சம்பவத்தில் இருந்து தப்பித்தாரா? அந்த பங்களாவில் என்ன நடந்தது? அவரின் காதல் திருமணம் நல்ல படியாக சென்றதா? என்பதுதான் படத்தின் கதை.

தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ், இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு இவரே இசையமைத்து இருக்கிறார். படத்தின் கதாநாயகி சம்யுக்தா ஹெக்டேவுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சுமன் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். யோகிபாபு வழக்கம்போல் தன்னுடைய திறமையால் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை சுவாரசியமாகவும், திரில்லாகவும் செல்கிறது. அதற்கு தகுந்த மாதிரி பின்னணி இசையும் செல்கிறது.

இப்படத்தில் காவலாளியாக வரும் நாய்க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா காட்சி அமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார்

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் பொருத்தமான படம் வாட்ச்மேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here