வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

0
386

வெண்டைக்காய் ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என அழைக்கப்படுகிறது. வெண்டைக்காய் உணவில் இருப்பது நல்லது. வெண்டைக்காய் அதிகமாக
சாப்பிட்டால், அதன் காம்பை போலவே நமது புத்திக் கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. வெண்டைக்காயில் சிறந்த மாவுச்சத்து பொருட்கள் உள்ளன.


இதில் உள்ள பெக்டின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். இதய துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இதில் உள்ளது.

வெண்டைக்காயை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 % கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.
வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளியேறுதல் அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவம் சமைத்து சாப்பிட்டால் தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

காய், இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல் புண்ணையும் ஆற்றும், பிஞ்சுகளை நறுக்கி போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here