உங்கள் டிவியில் Youtube TV Video பார்ப்பது எப்படி?

0
271

தற்போதைய காலக்கட்டத்தில் டிவியை பார்த்து பொழுது போக்கிய காலம் போய், தங்களது மொபைலில் Youtube போன்ற App-களில் நேரத்தை போக்கும் காலமாகிவிட்டது.

அப்படிப்பட்டவர்களுக்கு Youtube நிறுவனம் மேலும், மேலும் சில அம்சங்களை படைத்துக் கொண்டே வருகிறது. அந்த படைப்புகளில் ஒன்றான Youtube TV-ன் மூலம் வீடியோக்களை தங்களது டிவியில் காணலாம்.

சரி, உங்கள் டிவியில் Youtube விடியோக்களை பார்ப்பது எப்படி என்பதை இப்போது காண்போம்.

முதலில் உங்கள் டிவியில் உள்ள Youtube TV App-னை திறக்கவும், அதேபோல் உங்களது மொபைலிலும் திறந்துக் கொள்ளவும்.

மேல், வலது பக்க முலையில் உள்ள Settings என்ற பக்கத்திற்கு செல்லவும்.

டிவியையும், மொபைலையும் ஏற்க்கனவே இனைத்து இருந்தால், “Watch on TV” எனும் option மூலம் டிவியில் படங்களை சந்தோசமாக காணலாம்.

டிவியுடன் மொபைலை இணைப்பது எப்படி?

மிகவும் சுலபமான ஒரு விசயம், டிவியில் உள்ள Youtube App-னை திறக்கும் பொழுது அதில் தனித்துவமான எண் ஒன்று இருக்கும், அந்த எண்ணை எடுத்து மொபைலில் “Link your TV” என்ற பக்கத்திற்கு சென்று அந்த எண்களை பதிவேற்றம் செய்தால் போதும். சிறிது நேரத்தில் டிவியும், மொபைலும் இணைப்புக்கு வந்துவிடும். அப்புறம் என்ன கொண்டாட்டம்தான்.

டிவியுடன் கணிணியை இணைப்பது எப்படி?

கணிணியையும், டிவியையும் இணைத்து விடியோக்களை பார்க்கலாம். அது எப்படி? www.youtube.com/pair என்ற இணையப்பக்கத்திற்கு சென்றால் மொபைலுக்கு கேட்டது போல், டிவியின் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவேற்றம் செய்தால் போதும். கணிணியும், டிவியும் தொடர்பில் வந்துவிடும்.

அதற்கு பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானலும் உங்களது டிவியில் உள்ள Youtube TV App-னை உங்கள் மொபைல், கணிணி உதவியோடு படங்களை குடும்பத்தோடு பார்த்து ரசிக்காலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here