பலாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தென்னிந்தியாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை தான் பலாப்பழத்தின் தாயகம். இதை ஆங்கிலத்தில் Jackfruit என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் பண்ருட்டி பலாப்பழம் மிகவும் பெயர் பெற்றது. அதேபோல் கொல்லிமலை, வெள்ளிமலை, ஏலகிரி மலை போன்ற இடங்களில் பலாப்பழம் அதிகம் பயிரிடப்படுகிறது.

பலா மரம் 30 மீட்டர் உயரத்துக்கும் அதிகமாக வளரும். ஒரு மரத்திலிருந்து வருடத்திற்கு 100 முதல் 250 பழங்கள் அறுவடை செய்யலாம். ஒவ்வொரு பழமும் 3 முதல் 30 கிலோ எடை இருக்கும். 100 கிராம் பலாப்பழத்தில் 95 கலோரி எரிசக்தி உள்ளது. பழத்திலுள்ள சுக்ரோஸ் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. பலாப்பழத்தில் நார்ச்சத்து உள்ளதால் மலசிக்கல், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் சரிசெய்கிறது.

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும் இப்பழத்தில் போலிக் ஆசிட், ஹோமோ சிஸ்டீன் ஆகியவை உள்ளது. இதனால் இதய நோய்களும் மாரடைப்பும் 25% தடுக்கப்படுகிறது. பலாப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் கட்டுபாட்டில் இருக்கும். இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராக இருக்கும். எலும்பு வளர்ச்சிக்கு தேவையான மெக்னீசியம் சத்து பலாப்பழத்தில் உள்ளது.

பலாப்பழத்தில் காப்பர் சத்து உள்ளதால் தைராய்டு சுரப்பி நன்றாக வேலை செய்ய உதவுவதால் தைராய்டு நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பலாப்பழம் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். குழந்தைகள், பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள் ஆகியோர் பலாப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

பலாப்பழம் நச்சுகளையும், தீய செல்களின் வளர்ச்சியையும் அழிக்கும் தன்மை கொண்டது. எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகிறது.

What do you think?

20 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Arun Jaitley Rare Images

how to live a healthy lifestyle

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறிர்களா? – தெரிந்துக்கொள்ள இதோ 13 வழிகள்