தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் பரவியது. தேனீக்களின் வாழ்க்கை சற்று வித்தியாசமானவை.
தேனீக்கள் சுமார் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகத் தெரிகின்றது.
தேனீக்கள் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.
தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும்.
புயல் வருவதை முன்கூட்டியே உணரும் சக்தி தேனீக்களுக்கு உள்ளது.
தேனீக்களின் பார்வை மிகக் கூர்மையாக இருக்கும். தேனீக்கள் ஐந்து கண்கள் கொண்டவை.
ஆண் தேனீக்கு கொடுக்கும், தேன் சேகரிக்கும் உறுப்பும் கிடையாது. ஆண் தேனீக்கள் இராணித் தேனீயுடன் உறவு கொண்டவுடன் உயிரிழந்துவிடும்.

தேனீக்களின் வகைகள்
தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, அடுக்குத்தேனீ, கொசுத்தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ, இராணித் தேனீ, இந்தியன் தேனீ, இத்தாலியன் தேனீ என பல வகைகள் உள்ளது. இதில் இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும்.
மூன்று வகை தேனீக்களும் தனித்தனி அறையில் வாழும். தேனீக்கள் ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சமாக 400 முறை இறக்கையை அசைக்கும்.
இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும், வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.
இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன.
தேனீக்கள் இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை.
தேனீயின் கூடு தேனீக்களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது.
தேனீ ஒருவரைக் கொட்டினால், அந்த தேனீயின் விஷப் பையில் இருக்கும் விஷம், தேனீயின் உடல் முழுவதும் பரவி தேனீயும் உயிரிழக்கிறது.