சித்த மருத்துவத்தில் கூந்தலை பராமரிக்க எளிய வழிமுறைகள்!

0
457
young woman with long beautiful hair

கூந்தல் உதிர்வதற்கு பல்வேறு உடல்நலக் காரணங்களும், உணவுப் பிரச்சினைகளும் உள்ளன. எனவே ஒரு பாட்டில் தைலத்தை (hair oil) தேய்த்துவிட்டு ஓரடி கூந்தல் உடனே வளரவில்லையே என ஏங்க வேண்டாம்.

தலைமுடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகியவை தீர சிறப்பான மருந்துகளையும், இனிவரும் பக்கங்களில் பட்டியலிடப்படுகின்றது எதுவுமே உடனே வளர்ந்து விடுவதில்லை. முடியும்தான். கொஞ்சம் பொறுமையாய் இருந்து, முடி வளமாகும் வரை காத்திருங்கள்.

முடிப்பிரச்சினை என்ன காரணத்தால் உண்டாகும்?. 

  1. வயதுமுதிர்ச்சி, போஷாக்கு குறைந்த உணவு, நெடுநாள் பட்டினி இவைகளால் முடிகொட்டலாம்.
  2. அடிக்கடி தலைக்கு குளிக்காமல், தலையில் அழுக்கு சேர்வதாலும் அழுக்கு சீப்புகளை உபயோகிப்பதாலும் தலைமுடி கொட்டலாம்
  3. அதிக வீரியமுள்ள நவீன மருந்துகளை (western) உபயோகிப்பதால் உண்டாகும் ஒவ்வாமையினால் (allergy) தலைமுடி உதிரலாம்.
  4. பெண்களின் கர்ப்பக்காலத்தில் கொடுக்கப்படும் மருந்துகளினாலும் முடிகொட்டுதல் உண்டாகும்
  5. அதிக உஷ்ணத்தில் அலைதல், வெப்பம் மற்றும் நெருப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபடுதல், தலைமுடியை உலரவைக்க, மின்சாரத்தில் இயங்கும் முடி உலர்த்தியை (hair dyer) அடிக்கடி உபயோகித்தல் போன்றவற்றாலும் தலைமுடி கொட்டும்.
  6. உப்பு தண்ணீரில் (salt water) அடிக்கடி குளிப்பதாலும், பொடுகு (dandruft) உண்டாகி முடி கொட்டலாம். முடி-உதிருவது வழுக்கை ஆகியவற்றிற்கு ஒரே நிரந்தரத்தீர்வு தேவையற்ற எண்ணெய்கள் எதுவும் வேண்டாம் நம்பிக்கையுடன் கீழேக்கொடுக்கப்பட்டுள்ள முறைகளைப்படிக்கவும் செய்து பார்க்கவும்.

எண்ணெய்க்காய்ச்ச தேவையான பொருட்கள் 

  • கையந்தாரை (கரிசலாங்கண்ணி தளை) – 2 கட்டு அளவு.
  • குண்டுமணி-100 கிராம்.
  • எள் எண்ணெய்-200 மில்லி.
  • எண்ணெய்க் காய்ச்சும் முறை 

இரவு முழுவதும் குண்டுமணியை தண்ணீரில் ஊறவைத்தப்பின். காலையில் அதன் தோளை எளிதாக பிரித்து எடுத்துவிடலாம். அதில் உள்ள வெள்ளைப்பருப்பை எடுக்கவும் சிகப்பு நிற தோல் தேவையில்லை. பிறகு கையந்தாரையை எடுத்து நன்றாக அதன் இலைகளை பிரித்து எடுக்கவும்.

பின் குண்டுமணிப் பருப்பினை இந்த கையந்தாரை இலைகளுடன் சேர்த்து அரைக்கவும் நன்றாக கருப்பு நிறம் வரும் அளவுக்கு அரைக்கவும் பின் அதை வழித்து எடுத்து வைக்கவும்.

நல்லெண்ணெயை அந்த அரைத்ததோடு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும் சாரம் முழுவதும் எண்ணெயில் இறங்கியப்பின் நிறுத்தி 1 நாள் வரை ஆறவைக்கவும். பின் நன்றாக துணியில் பிழிந்து வடிகட்டியப்பின் பயன்படுத்தவும்.

குறிப்பு கையந்தாரை (கரிசலாங்கண்ணி) எல்லா காடுகளிலும் முக்கியமாக வயக்காட்டில் வரப்பில் வளரும். பச்சையாக பயன்படுத்த வேண்டும். பொடி வேண்டாம்.

குன்றிமணி என்பது (குண்டுமணி) பிள்ளையாருக்கு கண் வைக்கப்பயன்படும் மணி. இது முள்வேளியை ஒட்டி வளரக்கூடிய கொடியான தாவரம். தேடி அலையவேண்டாம் பொிய மூலிகை கடைகளில் கிடைக்கும்.

எள் எண்ணெய் நல்லெண்ணெய்தான் சுத்தமானதாக செக்கில் எடுக்கப்பட்டு இருந்தால் நல்லது. நல்லெண்ணெய்க்குதான் துவாரத்தை திறக்கக்கூடிய சக்தியிருக்கின்றது.

நான்கு பங்கு கையந்தாரை, இரண்டு பங்கு குன்றிமணிப்பருப்பு, ஒரு பங்கு எள் எண்ணெய் அரைத்து சீலை வடிகட்டி தினமும் பூசப்பா கிழவனுக்கும் சடைகாணும் என்று அகத்தியர் தனது குணப்பாடத்தில் தொிவித்துள்ளார்கள்.

வேண்டுமானால் வழுக்கை ஏற்பட்டவர்கள் முழுவதும் மொட்டை அடித்தப்பின் தலையில் எண்ணெயை மசாஜ் செய்து வரவும் தினமும் இரவு செய்தபின் காலையில் கண்டிப்பாக சீயக்காயோ அல்லது சாம்பூவை பயன்படுத்தவேண்டாம். வெறுமனே தலைக்குளிக்கவும். பாருங்கள் பிறகு மாதம் மாதம் உங்களுக்கு தலைக்கான முடிவெட்டும் செலவும் கூடிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here