பெண்களால் சிறுநீரை அடக்க முடியாதது ஏன்?

0
308

பெண்களுக்கு கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய், மலக்குடல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன.

இதனால் பெண்களால் சிறுநீரை அடக்கமுடியாது, இந்த பிரச்சனை 63 சதவிகித பெண்களுக்கு உள்ளது. அதாவது, பெண்களுடைய சிறுநீர் பைக்கும் சிறுநீர் வெளியேறும் துவாரத்துக்கும் இடையே மிகக் குறைவான இடைவெளிதான். அதாவது நான்கு முதல் ஐந்து செ.மீ. தான் உள்ளது, ஆனால் ஆண்களுக்கு இந்த இடைவெளி 15 செ.மீ.

இதுமட்டுமின்றி பெண்களுக்கு முக்கியமான உறுப்புகள் அருகருகே அமைந்துள்ளதால், எதாவது ஒன்றில் தொற்று ஏற்பட்டால் கூட மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன், கர்ப்பப்பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம்.

குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம். இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க நேரிடும், தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.

முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் “Stress Urinary Incontinence” என்ற பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சினையாலும், அதைச் சுற்றியிருக்கும் தசைகள் தளர்வடைவதாலும் இந்தப் பிரச்சினை ஏற்படும்.

இவர்கள் தும்மினாலோ, சிரித்தாலோ, இருமினாலோ, ஏதாவது எடையை தூக்கும் போதோ அல்லது குனிந்து நிமிரும் போதோ சிறுநீர் கசிவு ஏற்படும். இதனை வெளியில் சொல்லாமல் மறைப்பவர்களே அதிகம், ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது.

சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது அவசியம். இது தவிர கருத்தடை சாதனம் பயன்படுத்துவதாலும் பெண்களுக்கு சிறுநீர்ப்பை பாதிப்படையும். பிரசவக் காலத்திலும் சிறுநீர் தொற்று வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் அது குழந்தையை பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here