தாம்பத்தியத்தின் நன்மைகள் என்ன?

0
242

மனம் முடித்த இரு உள்ளங்கள் கூடும் ஒரு விடயமே தாம்பத்தியம், ஒரு நல்ல தாம்பத்தியம் கணவன், மனைவி இருவருக்குமே உடல் மற்றும் உள்ள நலனை மட்டும் இன்றி ஆரோக்கியத்தையும் தர வல்லது.

ஒரு நிம்மதியான உடல் உறவு மனிதனின் மூளையை சுறுசுறுப்பாகி அவர்களது நியாபக திறனை அதிகரிக்க உதவுகிறது.

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் சுரக்க பெரிதும் உதவுவது ஒரு நல்ல உடலலுறவே. இந்த ஹார்மோன் சுரப்பதால் பெண்களின் மேனி இயற்கையாகவே அழகுறும்.

அதி வேகமா நகரும் வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிக்கும் ஆணும் பெண்ணும் தங்களுக்கு ஏற்படும் கவலைகளை மறக்க அடிக்கடி மாத்திரைகளை உட்கொள்கின்றனர், ஆனால் அந்த சமயத்தில் அந்த ஆணும் பெண்ணும் வைத்துக்கொள்ளும் அழகான உடலுறவு அந்த கவலையை போக்கவல்லது.

கணவன் மனைவி உடலுறவு கொள்ளும்போது அவர்களின் மொத்த உடலும் அந்த உடலுறவில் ஈடுபடுகிறது, ஆகையால் ஒரு நல்ல உடலுறவின்போது உடலில் உள்ள எல்லா தசைகளும் செயல்பட்டு ஆரோக்கியம் பெறுகிறது.

குளிர்காலங்களில் உடலுறவில் ஈடுபடும்போது உடல் சூடாகிறது, மேலும் உடலின் வெப்பநிலை சீராக மாறுகிறது.

இஸ்பரிசத்தை வருடுதல், முத்தம் கொடுத்தல் போன்ற விடயங்களும் தாம்பத்தியத்தில் ஒன்று தான். உடல் உறவு இல்லாத நேரத்தில் இது போன்ற வருடல் மற்றும் முத்தம் கொடுத்தலில் ஈடுபடும் தம்பதிகளின் ஆரோக்கியம் பல மடங்கு உயர்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நல்ல மனம், நல்ல வாழ்க்கை என்பது ஒரு நல்ல தாம்பத்தியத்தில் உள்ளது என்பதே நிதர்சனமான உண்மை…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here