உலர்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

0
566

உடலுக்கு தேவையான 5 கிராம் நார்ச்சத்து இதில் உள்ளது. 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகள் தீரும்.

ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழத்தை சாப்பிடுவது மிக நல்லது.

நமது உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து பொட்டாசியத்தின் அளவு குறைந்திருந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். அதை தடுக்க உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடலாம். ஏனென்றால் இதில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருக்கிறது.

100 கிராம் அத்திப்பழத்தில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள்

புரதச்சத்து 1.3 கிராம்
கொழுப்புச்சத்து 0.3 கிராம்
மாவுச்சத்து 9.5 கிராம்
நார்ச்சத்து 2 கிராம்
கலோரிகள் 43

100 கிராம் உலர் அத்திப்பழத்தில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள்

புரதச்சத்து 3.3 கிராம்
கொழுப்புச்சத்து 1.5 கிராம்
மாவுச்சத்து 48.6 கிராம்
நார்ச்சத்து 9.2 கிராம்
கலோரிகள் 209

உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் இருப்பதால் உடலின் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் வராமல் தடுக்கிறது.