தயிர் சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா? கெட்டதா?

தயிர் சாப்பிட்டால் உடம்பு எடை அதிகரிக்கும் என்ற ஒரு விடயம் இருந்தாலும், அதில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது.

தயிர் சாப்பிடும் விடயத்தில் எவ்வளவு கலோரிகள் வரை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்.

சில தயிர் பாக்கெட்டுகளில் 100 கலோரிகளும், 6 கிராம் புரதமும் இருக்கும். அதற்குப் பதில் அதிக கலோரிகள் இருந்தாலும், 15 கிராம் வரை புரதம் இருக்கும் தயிரைப் பயன்படுத்துதல் நல்லது. சிலர் பெரிய பாத்திரத்திலிருந்து சாதத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு தயிர் சாதம் சாப்பிடுவார்கள்.

இவ்வாறு சாப்பிடுவது சாதாரணமாகவே தோன்றினாலும், உண்மையில் அவர்கள் நிறைய சாப்பிட்டிருப்பார்கள். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடம்பு எடை போடும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். எனவே அளவோடு தயிர் சாதம் சாப்பிடுதல் நல்லது.

curd rice

தயிர் சாப்பிடும் போது தேன், தானியம், நட்ஸ், பழங்கள் போன்ற வேறு உணவுப் பொருட்களையும் சேர்த்துக் கொள்வது சிலருக்கு வழக்கம். அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு அல்லது மிகவும் குறைத்து விட்டு, தயிருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள். காலை உணவாக இருந்தால் மட்டும், சிறிது நட்ஸ்களை சேர்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் வாங்கப் போகும் தயிர் பாக்கெட்டுகளில் 18 கிராமுக்கு அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தாலோ அல்லது தயிர் பாக்கெட் லேபிளில் சர்க்கரை முதலாவது இடத்தில் இருந்தாலோ அதைத் தவிர்த்து விடுங்கள்.

அது தான் கொழுப்பை அதிகமாக்குகிறது. பதிலாக, புரதம் அதிகமாக இருக்கும் தயிர் பாக்கெட்டுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

கடைகளில் விற்கப்படும் தயிரை வாங்கும் போது, அதில் எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு கலோரி, எவ்வளவு சர்க்கரை என்று பார்த்துப் பார்த்து வாங்க வேண்டியிருக்கும்.

ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் தயிரில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆகையால், வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிரை அளவோடு சாப்பிட்டு வந்தால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

What do you think?

20 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Actress Anketa Maharana Photos

Actress Anketa Maharana Cute Stills

குழந்தை பேறு கிடைக்க உதவும் இயற்கை உணவுகள்…