தர்பார் திரை விமர்சனம் | Darbar movie review Tamil

0
179

தர்பார் படம் ரஜினியின் அதிரடி ரசிகர்களுக்கு கிடைத்த அதிரடிப்படம்.. ஒவ்வொரு நகர்வும் அற்புதமாக இருக்கிறது.

கதையில், ரஜினி, டெல்லியில் பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து துவம்சம் செய்து வந்தவரை மும்பைக்கு பணிமாற்றம் செய்கின்றனர்.

மும்பையில் பொறுப்பெடுத்த இரண்டே நாளில் ரஜினி மும்பையில் உள்ள போதை பொருள் விற்பவர்கள், பெண் பிள்ளைகளை கடத்துபவர்கள் என அனைவரையும் பிடித்து மும்பையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றார்.

இந்த அதிரடியில் மிகப்பெரிய தொழிலதிபர் மகனும் சிக்க, அவனை வெளியே விடாமல் ரஜினி அடம் பிடிக்க, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தொழிலதிபர் மகனை வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்க, இதையெல்லாம் கடந்து அந்த தொழிலதிபர் மகனை ரஜினி கொல்ல, பிறகு தான் தெரிகிறது, இறந்தது வெறும் தொழிலதிபர் மகன் இல்லை, மிகப்பெரும் டான் சுனில்ஷெட்டியின் மகன் என்று, பிறகு என்ன இருவருக்குமிடையே நடக்கும் மோதல்தான் இந்த தர்பார்.

மிடுக்கான போலிஸ், நயன்தாராவுடன் காதல், என சக்கை போடு போட்டுள்ளார். இரண்டாம் பாதியில் ரயில் நிலைய சண்டைக்காட்சி மற்றும் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் காட்சிகள் அருமை.

படத்தில் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது, இரண்டாம் பாதி பல எதிர்ப்பார்ப்புடன் தொடங்க படத்தின் மெயின் வில்லன் யார் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது, ஆனால் ரஜினிக்கு தெரியவில்லை அதனால் அவருக்கு சஸ்பென்ஸ் இருக்கும், ஆனால், நமக்கு ஒன்றும் இல்லை.

இதில் செண்டிமெண்ட் காட்சிகள் அருமையாக இருக்கிறது, நிவேதா தாமஸும் அழகாக நடித்துள்ளார். யோகிபாபு காமெடி பல இடங்களில் நன்றாக இருக்கிறது, நயன்தாரா வழக்கம் போல் வந்து போகிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் சிவம் ஒளிப்பதிவு, மும்பை மற்றும் அதன் புறநகர்களுக்குள் நாமே போன அனுபவம், அனிருத் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும், பின்னணி சற்றே இறைச்சல்.

இயக்குனர் முருகதாஸ், ரஜினிக்கு ஒரு தர்பாரையை அமைத்துக்கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here