உடற்பயிற்சி செய்யாமல் தொப்பை குறைப்பது எப்படி?

0
145

ஆண்களின் அழகுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. வாலிபர்களாக இருக்கும்போது தொப்பை இல்லாமல் அழகுடன் காணப்படும் இளைஞர்கள் திருமணமானதும் நல்ல உணவால் தொப்பை உருவாகிவிடும்.

இந்த தொப்பை, ஆண்களின் அழகை குறைப்பதோடு ஆரோக்கியத்திற்கும் பிரச்சனையை உருவாக்குகிறது. தொப்பை உருவான பிறகு வேகமாக நடக்க முடியாது, பஸ்களில் ஏறி இறங்க சிரமப்படுவார்கள்.

சரி தொப்பையை உடற்பயிற்சி செய்யாமல் குறைப்பது எப்படி இதோ சில வழிகள்

உணவில் சேர்க்கும் உப்பின் அளவை குறையுங்கள்

சிப்ஸ் ஊறுகாய் வகைகளை அதிகம் சாப்பிட வேண்டாம்

உடலில் இயற்கையாக இருக்கும் தண்ணீர் தன்மையை குறைக்கும் விதத்திலான மருந்துகளை உபயோகிக்க வேண்டாம்

பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்றவைகளில் சாப்பாட்டில் சேர்க்காமல் இருப்பது நல்லது

எப்போதும் அரை வயிறு அளவுக்கு சாப்பிட்டால் போதும் மூச்சு விட முடியாமல் சிரமப்படும் அளவிற்கு சாப்பிட்டால் தொப்பை அதிக தொல்லை தரும்

உருளைக் கிழங்கு கடலை பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பதை பெருமளவு குறையுங்கள் அல்லது சாப்பிடாமல் விட்டுவிடுங்கள்

பேக்கரியில் விற்கப்படும் பொருட்களை அறவே ஒதுக்க வேண்டும் முடியாவிட்டால் அளவோடு உண்ண வேண்டும்.

முடிந்தவரை உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அளவாக சாப்பிட்டால் ஆரோக்கியம்

இருந்தாலும் உடல் ஆரோக்கியம் மென்மேலும் வளர சிறு உடற்பயிற்சி அவசியம். குறைந்தபட்சம் நடை பயிற்சி எடுப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here