மிளகில் உள்ள மருத்துவ குணங்கள்

0
57

மிளகு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் உள்ளது. இது உணவுக்கு கூடுதல் சுவையை ஏற்படுத்தவும் உதவுகிறது.

மிளகில் காரச்சத்துகள் அதிகமுள்ளது. இந்த காரத்தன்மை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு தொற்று நோய்கள், ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வராமல் இருப்பதற்கு கருப்பு மிளகு உதவுகிறது. மிளகு புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மூன்று கிராம் மிளகை எடுத்து அதனை பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 125 மில்லி லிட்டராக காய்ச்சி வடிகட்டி குடித்து வர காய்ச்சல், வயிற்றுப் பொருமல் ஆகியவை தீரும்.

அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைபாரம், தலைவலி நீங்கும்.

3 ஆடாதொடை இலையுடன் 10 மிளகு சேர்த்து மை போல் அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட இருமல் காணாமல் போகும்.

மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.

மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்துத் தலையில் புழுவெட்டு உள்ள இடங்களில் பூசிவந்தால் முடி வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here