தாம்பத்தியத்தில் ஏற்படும் பலன்கள் என்ன?

கணவன் மனைவி இடையே தாம்பத்திய இருக்கும் உறவு, இருவருக்குமே மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை தருகிறது.

மழை மற்றும் குளிர்காலத்தில் உடலை குளிர் தாக்குகிறது, அப்போது உறவு வைத்துக் கொண்டால் உடல் வெதுவெதுப்பாகி தட்பவெப்பநிலையை சீராக்குகிறது. நிம்மதியான, ஆரோக்கியமான உறவு மூளையை சுறுசுறுப்பாக்கும் நினைவாற்றலை அதிகரிக்கும்.

உறவினில் நமது உடம்பில் உள்ள அனைத்து தசைகளும் இயங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது ஒரு முழுமையான நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்டதற்கு சமமாகும்.

Relationship Benefits

தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிக்கும் பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது, இதனால் அவர்களது உடல் அழகு பெறும்.

அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தனது துணையிடம் இன்பம் அணுபவித்தாள் மருந்து மாத்திரைகளை விட பல மடங்கு இயற்கையான மன அமைதியை தரும். மேலும் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த இயற்கை மருத்துவமாகும்.

முத்தம் கொடுத்தல், அணைத்தல், வருடுதல் இதையெல்லாம் தாம்பத்தியத்தில் ஒரு முக்கிய அங்கமாகும். குறிப்பாக தாம்பத்தியத்தில் முத்தத்திற்கு முதல் உரிமை உண்டு. இதனால் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் தாக்குவதில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காரணம் இத்தருணத்தில் உமிழ்நீர் அதிகம் சுரந்து வாயினை சுத்தப்படுத்துகிறது.

மேலும் உமிழ்நீர் அதிகமாக சுரப்பதால் ஜீரணக்கோளாறு இருக்காது. இவை அனைத்தும் கணவன் மனைவிக்கிடையே முழுமையான தாம்பத்தியம் அமைந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

What do you think?

19 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

what nails tell about your health in tamil

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? உங்கள் நகம் சொல்லும்…

Actress Samantha Akkineni Saree Images

Actress Samantha Akkineni Saree Images