உடல் எடையை குறைக்கும் உணவு முறைகள் என்ன?

0
75

காலையில் வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும். தினமும் காலையில் ஆப்பிள் பழம் சாப்பிடலாம் இது உங்களது இடுப்பில் உள்ள சதைகளை குறைக்க உதவியாக இருக்கும். மேலும் ஆப்பிள் பழம் உடலுக்கு தேவையான சக்தியைத் தருகிறது.

கொள்ளு பருப்பில் அதிகளவு மாவுச் சத்து உள்ளதால் கொழுப்புத் தன்மை எனப்படும் தேவையற்ற சதையை குறைக்கும். முட்டைக்கோஸ், குடைமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குளிர்ந்த நீரை குடிப்பதற்கு பதிலாக சூடான நீரில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைவதை காணலாம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள அதிகப்படியான சதைகள் குறையும்.

அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எலுமிச்சை சாறை கலந்து குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறையும்.

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கொதிக்கவைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு வாரத்துக்கு கொடுத்து வந்தால் விரைவில் உடல் எடை குறையும். சீரகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்கும்.

தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.

சுரைக்காயை வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது வயிற்று சதையை குறைக்க உதவும். உணவில் வெங்காயம், பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here