அவரு very dirty வில்லன்.. நடிகர் கார்த்தியின் பிறந்தநாளன்று வெளியான ஜப்பான் அப்டேட்!

ராஜு முருகன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜப்பான். பிரபல நடிகர் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளாகவே சைலெண்டாக பல ஹிட் படங்களை கொடுத்து வருகின்றார். அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்று நடித்த வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரம் மெய்சிலிர்க்க வைத்தது.
அந்த படத்தை தொடர்ந்து அடுத்தபடியாக வருகின்ற தீபாவளி திருநாளுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜப்பான். இன்று கார்த்திக் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜப்பான் என்ற கதாபாத்திரம் யார் என்பதை கூறும் வீடியோ ஒன்று வெளியானது.
பிரபல நடிகர் சிலம்பரசன் இந்த வீடியோவை வெளியிட்டார், தனக்கே உரித்தான கிண்டலுடன் இந்த ஜப்பான் படத்தில் நடித்துள்ளார் கார்த்திக். பிரபல மூத்த நடிகர் வாகை சந்திரசேகர் இந்த படத்தில் நடித்துள்ளார், மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்.
முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் இந்த படத்தில் தோன்றி நடித்துள்ளார் கார்த்தி என்றால் அது நிச்சயம் மிகையல்ல. சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்திக் சுப்புராஜின் ஜிகிர்தண்டா டபிள் x மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று படங்கள் இந்த வருடம் போட்டியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.