கையில் பிடித்த பாம்பு.. கண்ணை கொத்தியது..! இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

பாம்பை கண்டால் படையே நகரும்.. ஆனால் ளோரிடாவில் உள்ள எவர்லேண்ட்ஸ் தேசிய பூங்காவில் நிக் என்று இளைஞர் ஒருவர் மலை பாம்பை பார்த்தவுடன் அதனை பிடித்து சாகசம் செய்து வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் அந்த பாம்பு அவரை கடிக்க முயற்சி செய்கிறது.. அதை கடிக்க விடாமல் அந்த நபர் தொடர் சாகசாத்தில் களமிறங்கியுள்ளார். ஆனால் அந்த பாம்பு அவரது கை கடித்து விடுகிறது. கை கடித்த சிறிது நேரத்தில் அவரது கண்ணிற்கு பாய்ந்தி கண்ணின் மேற்பகுதியில் கொத்தியுள்ளது.

Viral : கையிலிருந்த பாம்பு திடீரென கண்ணை கொத்தியது... அடுத்து? - ஷாக்கிங் வைரல் வீடியோ

மலைபாம்பு நேரடியாக அவர் கண்ணை தாக்கிய பின், கண்ணின் மேல் பகுதியிலிருந்து ரத்தம் வழிகிறது. இது போன்று நிக் ஒரு பாம்பால் தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல.

Advertisement

அவர் பல முறை பாம்புகளால் கடிக்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அவர் பலத்த காயமடையவில்லை. இந்த வீடியேவை தனது யூடியூப் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.