ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா.. சிறந்த நடிகர் விருதை வென்ற தளபதி!

கைதி படத்திற்கு பிறகு, மூன்றாவதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்ற பொழுதும், வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் மெகா ஹிட் கொடுத்தது.
தற்பொழுது விஜய் அவர்கள் தனது 67வது திரைப்படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது மாஸ்டர் படத்திற்காக விஜய் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறந்த வில்லனுக்கான விருது மிஸ்டர் படத்திற்காக விஜய் சேதுபதி அவர்களுக்கும், மாஸ்டர் படத்திற்காக தினேஷ் மாஸ்டருக்கு சிறந்த நடன இயக்குனருக்கான விருதும் கிடைத்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாவில் மாஸ்டருக்கு கிடைத்துள்ள இந்த கௌரவத்தால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லியோ திரைப்படம் மாபெரும் பட்ஜெட் மற்றும் பல சிறந்த முன்னணி நடிகர்களை கொண்டு உருவாகி வருகின்றது. வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.