தனுஷ் நடித்த அசுரனுக்கு தேசிய விருது.. பார்த்திபன் நடித்து, இயக்கிய ஒத்த செருப்புக்கு..?

67-வது ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் ,புது டெல்லியில் அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் 2019-ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள், மற்றும் கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டன.

அதில் அசுரன் திரைப்படம் சிறந்த படம் என்ற விருதை பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்த நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். மேலும் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு சிறப்பு தேசிய விருதை(jury award) பெற்றுள்ளது.

தல நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சப்போர்ட்டிங் கதாப்பாத்திரத்தில் நடித்த, நடிகர் விஜய் சேதுபதி தேசிய விருதை வென்றுள்ளார்.

Advertisement

இதுமட்டுமில்லாமல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பட்டியலில் நாக விஷால் தேர்ந்தெடுக்கப்படுள்ளார். இவ்விருது கே.டி.கருப்புதுரை படத்தில் நடித்ததிற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.