மகனுக்கு ஏறும் குளுக்கோஸில் மலம் கலந்த தாய்..! அதிர வைக்கும் சம்பவம்

ஆஸ்திரேலியாவில் ஒரு தாய் தனது 9 வயது மகனை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கூட்டி சென்றுள்ளார். அங்கு சென்ற 9 வயது மகன் ஏன் அம்மா என்னை இங்கே கூட்டி வந்தீங்க.. எனக்கு நோய் இல்லையே என்று கூறியுள்ளார். இதனை கவனித்த செவிலியர், சந்தேகத்தால் அந்த தாயிடம், பையனுக்கு என்ன செய்கிறது என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த தாய் என் பையனுக்கு ஆஸ்துமா, மூச்சு அடைப்பு ஏற்படுகிறது இதனால் எனது பையனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கூறிய பின் மருத்துவர்கள் அந்த பையனை சோதித்து பார்த்தனர், ஆனால் தாய் சொன்ன நோய்கள் பையனுக்கு இருக்க வாய்ப்பில்லை என்று சோதனைக்கு பின் மருத்துவர்கள் தெரிவித்தனர்..

ஆனால் தாய் இருக்கு என்று அடம்பிடித்தார்.. மருத்துவர்களும், செவிலியர்களும் பையனிடம் இருந்து விலகி சென்ற பிறகு தாய் பையனுக்கு குளுக்கோஸ் ஏறும் குழாயில் மலத்தை கலந்து விட்டார்..

இதனை பார்த்த பையன், என்னம்மா பன்றீங்க.. என்னை ஏன் நோயாளிய ஆக்குறீங்க என கேட்டுள்ளார். இதனை கேட்காத தாய் பேச்சை மாற்றியுள்ளார். அதன் பின் மருத்துவர்கள் பையனின் இரத்தத்தை பரிசோதித்து பார்த்தனர்.

அதில் மலத்தில் இருக்கும் கிருமிகள் கலந்திருப்பது தெரியவந்தது.. இது எப்படி வந்திருக்கும் என்று மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் அவரது தாய் செய்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அதிர வைக்கும் தகவல் வந்தவுடன் அந்த தாய் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் அந்த சிறுவன் தன் தாய் எந்த தவறும் செய்யவில்லை, தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தான் நாங்கள் மருத்துவமனைக்கு வந்தோம்..

எனது தாயை கைது செய்யாதீர்கள் என்று அச்சிறுவன் காவல் துறையிடம் கூறியுள்ளான். ஆனால் அந்த பெண் மீது வழக்கு பதிவு மட்டும் செய்யப்பட்டது.