மீண்டும் விஷாலுடன் கைகோர்க்கும் ஹிட் இயக்குநர்.. விரைவில் படப்பிடிப்பு துவக்கம்!

பிரபல தயாரிப்பாளரின் மகனாக பிறந்து, சினிமா துறையில் சில கஷ்டங்களை அனுபவித்து இன்று திரைத்துறையில் ஒரு உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் உள்ள நடிகர் தான் விஷால். 2004ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் இவர் கதையின் நாயகனாக அறிமுகமானார்.
அன்று தொடங்கி இன்று வரை சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை முதல் லத்தி வரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். மேலும் பாலா நடிப்பில் இவர் நடித்து வெளியான அவன் இவன் மற்றும் மிஸ்கின் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படங்கள், விஷால் நடிப்பை மக்களுக்கு உணர்த்திய படங்கள் என்றே கூறலாம்.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான திரைப்படம் தான் பூஜை, விஷாலுக்கு பிரேக் கொடுத்த ஒரு திரைப்படம் என்றே கூறலாம். இந்த படத்தை விஷால் தயாரிக்க பிரபல இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்நிலையில் விஷால் அவர்களின் 34வது திரைப்படத்தை இயக்க உள்ளார் ஹரி, இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜி ஸ்டூடியோ சவுத் நிறுவனம் தயாரிக்க உள்ளது. விரைவில் இந்த படத்தின் படபிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.