வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து தொடரும் : உச்ச நீதிமன்றம்

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து தொடரும் என்றும் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி மாதம் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

10.5% இட ஒதுக்கீட்டின்கீழ் ஏற்கெனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.