விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு 120 கோடி சம்பளம்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் 66-வது படம் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

‘தர்பார்’ படத்துக்கு ரஜினி 108 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற நிலையில் விஜய் தனது அடுத்தப் படத்துக்கு 120 கோடி ரூபாய் சம்பளத்துக்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

vijay news in tamil

விஜய் முதல்முறையாக தமிழ் – தெலுங்கு பைலிங்குவல் படத்தில் நடிக்கிறார். ‘தோழா’ படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்குகிறார். ‘தில்’ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். வம்சிக்கு இது 6-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement