தமிழக மக்களுக்கு ஒரு நம்பிக்கை செய்தி சொன்ன தமிழக சுகாதாரத்துறை

நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனாலும், மக்களுக்கு சற்று நம்பிக்கை தரும் வகையில் சில நல்ல விஷயங்களும் நடந்து வருகிறது.

அவ்வாறு, தமிழகத்தில் நேற்று 17 மாவட்டங்களில், அதாவது கோவை, ஈரோடு, கரூர், நாகை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், நெல்லை, திருப்பூர், திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாட்டங்களில் புதிய தொற்றுக்கள் எதுவும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது ஒரு நம்பிக்கை தரும் செய்தியாக பார்க்கப்படுகிறது.

நேற்றையை அறிவிப்பின் படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 646 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 11,640 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 857 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 788 பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. 611 பேர் நேற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement