“மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய மாட்டேன்” என பெற்றோர் கூறியதால் இளைஞர் தற்கொலை

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மொபைல் டேட்டா பயன்படுத்தி வருகின்றனர். சிலர் இதனை சரியாக பயன்படுத்தி வந்தாலும் இன்னும் சில பேர் இதனை தவறான செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக மொபைல் டேட்டா பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 20 வயது இளைஞர் ஒருவர் தனது மொபைலுக்கு ரிசார்ஜ் செய்து தரக்கோரி பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்க்கு அவர் மறுப்பு தெவித்தார். இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போபால் காவல்நிலையம் ஒன்றின் நிலைய அதிகாரி எஸ்.ஷர்மா, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “தன் பெற்றோரிடம் ரீசார்ஜ் செய்து தரக்கோரி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். அவர்கள் மறுத்தனர். ஏன் மறுத்தனர் என்று தெரியவில்லை, இதன் வெறுப்பில் பையன் தற்கொலை செய்து கொண்டார்” என அவர் கூறியுள்ளார்.

Advertisement