2018-ஆம் ஆண்டு நடந்த நினைவு தினங்கள் ஒரு பார்வை

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அடல் பிகாரி வாஜ்பாய் ஆகஸ்ட் 16, 2018-ல் டெல்லியில் காலமானார்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி ஆகஸ்ட் 07, 2018-ல் சென்னையில் காலமானார்.

ஆகஸ்ட் 13, 2018-ல் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கொல்கத்தாவில் காலமானார். 1996-இல் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.

Advertisement

ஐக்கிய நாடுகள் சபையின் 7-வது பொதுச் செயலாளராக பதவி வகித்த கோஃபி அன்னன் ஆகஸ்ட் 18, 2018-ல் சுவிட்சர்லாந்தில் காலமானார்.

160-க்கும் மேற்பட்ட நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் டிசம்பர் 06, 2018-ல் சென்னையில் காலமானார்.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடர் இவர்.

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், மார்ச் 14, 2018-ல் காலமானார்.

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் என இந்தியாவில் இரு மாநிலங்களில் முதல்வர் பதவி வகித்த ஒரே அரசியல்வாதி என்.டி. திவாரி அக்டோபர் 18, 2018-ல் காலமானார்.

இங்கிலாந்துக்கான இந்திய தூதராகவும், மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் பணியாற்றிய குல்தீப் நய்யார் ஆகஸ்ட் 23, 2018-ல் டெல்லியில் காலமானார். இவர் பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளருமாகவும் பணிபுரிந்தவர்.

பஞ்சாப் மாநிலத்தின் துணை முதல்வராகவும், 6 முறை எம்.எல்.ஏ பதவியும் வகித்த மூத்த அரசியல் தலைவரான பால்ராம்ஜி தாஸ் ஆகஸ்ட் 14, 2018-ல் காலமானார்.சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.