2018 ம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை

ஆண்டாள் சர்ச்சை

2017 டிசம்பர் மாதம் வெளிவந்த நாளிதழ் ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்தார்.  இதற்க்கு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதோடு, எதிர்ப்புகளைப் பதிவுசெய்தும் வந்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது

சென்னையில் தமிழ் – சமஸ்கிருத அகராதியின் வெளியீட்டு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது காஞ்சி சங்கரமடத்தின் (அப்போதைய) இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது.

#tamil_insulted, #விஜயேந்திரா_மன்னிப்புக்கேள் என்ற ஹேஷ்டேக் மூலம் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன.

Advertisement

சென்னை ஐ.ஐ.டி. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

சென்னையில் உள்ள ஐஐடி யில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல், சமஸ்கிருத மொழியில் கடவுள் வணக்கப் பாடல் இசைக்கப்பட்டதால் சர்ச்சையாக மாறியது.

பெரியார் சிலை – எச். ராஜா சர்ச்சை

திரிபுராவில் லெனின் சிலை ஒன்று அகற்றப்பட்ட நிலையில் நாளை தமிழகத்தில் ஈ.வே. ராமசாமியின் சிலையும் அகற்றப்படும் என்று பா.ஜ.க. தேசியச் செயலர் எச். ராஜா கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்ததால் அந்த பதிவை நீக்கினார்.

கள்ள உறவில் பிறந்த குழந்தை

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை கள்ள உறவில் பிறந்த குழந்தை என பா.ஜ.கவின் தேசியத் தலைவர் எச். ராசா ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

இதனை  கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல இடங்களில் எச். ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்வி சேகர் சர்ச்சை

நடிகரும் பாரதீய ஜனதாக் கட்சியின் உறுப்பினருமான எஸ்.வி. சேகர் தனது பேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளர்களை குறித்த ஆபாசமான பதிவை பகிர்ந்தார்.

அவர் பகிர்ந்த பதிவு

“படிப்பறிவில்லாத, கேவலமான, பொது அறிவில்லாத பொறுக்கிகளே தமிழகத்தில் பெரு்பாலும் மீடியாவில் வேலைக்கு வருகிறார்கள். இந்தப் பெண்ணும் அதற்கு விதிவிலக்கில்லை என்பது தெரிகிறது. பல்கலைக்கழகங்களைவிட அதிக அளவில் செக்ஸுவல் அப்யூஸ் நடப்பது மீடியாக்களில்தான். பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ ஆகிவிட முடியாது என்பது சமீபத்திய பல புகார்களின் மூலம் வெளியே வந்த அசிங்கம். இந்த மொகரக்கட்டைகள்தான் கவர்னரைக் கேள்வி கேட்கக் கிளம்பி விடுகிறார்கள். தமிழகத்தின் மிகக் கேவலமான ஈனமான, அசிங்கமான, அருவருப்பான ஆபாசமான இழிந்த ஈனப் பிறவிகள் அதன்பெரும்பாலான மீடியா ஆட்களே. பொதுவாக தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவுமே கிரிமினல்களின் பொறுக்கிகளின் ப்ளாக்மெயில் பேர்வழிகளின் பிடிகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹைகோர்ட்டாவது ம…வது – எச் ராஜா மீண்டும் சர்ச்சை

புதுக்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலம் ஒரு குறிப்பிட்ட பாதையில் விநாயகர் ஊர்வலத்தைச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனக் கோரினார். அதற்கு அதற்கு காவலர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச். ராஜா ஒரு கட்டத்தில் காவலர்களையும் உயர்நீதிமன்றதையும் மிக இழிவான வார்த்தையொன்றால் குறிப்பிட்டார்.அந்த வீடியோ டவுன்லோடு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

பாசிச – பா.ஜ.க. அரசு ஒழிக’ கோஷம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அவரோடு சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார்.

பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது ‘பாசிச – பா.ஜ.க. அரசு ஒழிக’ என்று கோஷமிட்டுள்ளார். பிறகு தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார்.