நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்

0
814

நாய் கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

முதலில் கடிபட்ட இடத்தை நன்கு சோப்பு போட்டு ஓடும் நீரில் கழுவ வேண்டும். காயத்தை அழுத்தி,ரத்தக் கசிவை அதிகப்படுத்தவோ, கட்டுபோடவோ கூடாது. கடித்த நாயை கட்டிபோட்டு  ஒரு 10 நாட்களுக்காவது கண்காணிப்பது அவசியம்.

நாய் இறந்துவிட்டால் என்ன செய்வது?

கடித்த நாய் இறந்துவிட்டால் அதனை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அதற்கு வெறி கடி நோய் உள்ளதா என்று கண்டறிந்து அதற்கு ஏற்றால் போல் சிகிச்சை மேற்கொள்ள உதவும்.

காயம்பட்டவருக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்?

காயத்தை ஓடும் நீரில் கழுவிவிட்டு அதன் மேல் டிஞ்சர் பென்சாயின் அல்லது டிஞ்சர் அயோடின் போன்ற மருந்து ஒன்றைத் தடவலாம்.

காயம்பட்டவருக்கு தடுப்பூசி போட வேண்டும்

காயம்பட்டவருக்கு வில்வாத ஜன்னி (tetanus) எனும் தடுப்பூசி செலுத்த வேண்டும். இதனை விலங்கு கடித்த அன்று, பிறகு 3,7,14, 28 மற்றும் 90 நாட்களுக்கு ஒவ்வொரு ஊசி வீதம் ஆறு ஊசிகள் தவறாமல் போட வேண்டும்.

இதனால் வரும் தடுப்பாற்றல் எவ்வளவு காலம் இருக்கும்?

ஆறு தடுப்பூசிகள் முடிந்த பிறகு ஓர் ஆண்டு வரை நீடிக்கும். இதற்கிடையே மீண்டும் விலங்கு கடித்தால் இரண்டு ஊசிகள் ஒரு வார இடைவெளியில் போட்டால் போதும். ஆனால் சமிபத்தில் வெளிவந்துள்ள தடுப்பூசிகள் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும், மீண்டும் நாய் கடித்தாலும் ஒரே ஊசி போட்டால் போதும்.

தடுப்பூசி போடும் போது ஏதேனும் உணவில் கட்டுப்பாடு தேவையா?

வேண்டாம். எவ்வகை உணவையும் உண்ணலாம். ஆனால் மது மட்டும் அருந்த கூடாது. மதுபானம் நம் உடலின் எதிர்ப்புத் திறனை மிகவும் குறைப்பதால் நுண்கிருமியினால் விளையும் சேதம் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here