தலையில் உள்ள பொடுகை போக்குவது எப்படி?

0
235
பொடுகுவர முக்கிய காரனம் ஹார்மோன் கோளாறுகள், கூந்தலில் சரியில்லாத பராமறிப்பு, தவறான உணவு பழக்கம், டென்ஷன்,பரம்பரைத்தன்மை தான் இதற்க்கு காரணங்கள்.
  • பொடுகு வந்தவர்கள் வாரம் இரண்டு முறை தலைக்கு நல்ல ஷாம்பு அல்லது சியக்காய் போட்டு குளிக்கவும்.
  • கண்டகண்ட க்ரீம்களை தலைக்கு தேய்க்கக் கூடாது.
  • பொடுகு வந்த பின்பு தலையில் மிகுந்த அரிப்புகள் இருக்கும் அதனை விரல் நகம் வைத்து அதிகமாக சுரண்டக் கூடாது.
  • சீப்பை 3 நாளுக்கு ஒரு முறை சூடு தண்ணீரில் போட்டு அலசிய பின்பு பயன்படுத்தவும்.
  • அதிகமாக தண்ணீர் குடிக்கவும். எண்ணெய் அதிகம் உள்ள உணவு பண்டங்களை தவிர்க்கவும்.
  • முக்கியமாக டென்ஷன் இல்லாமல் இருக்கனும்.
  • தலையணை உறைகள் மற்றும் தலையணையினை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
  • சீப்பு, தலை துடைக்கும் டவல், ஹேர் ஹிளிப் தலைக்கு பயன்படுத்தும் அனைத்துமே தனியாக பயன்படுத்தவும்.
பொடுகு வராமல் தடுக்க வேண்டும் என்றால், குளிக்கும் முன்பு நன்றாக தலையில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயினை தலையின் வேரில் பஞ்சினை வைத்து தேய்து நன்றாக ஊறிய பின்பு குளிக்க வேண்டும், மேலும் வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும், எலூமிச்சை சாறு, அல்லது முட்டையின் வெள்ளை கரு அல்லது வெள்ளை முள்ளங்கி சாறு தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
பொடுகை போக்க…
4 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி,
4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர்,
2 கப் மருதாணி பவுடர்,
1 எலுமிச்சை பழ தோல்,
1 ஆரஞ்ப்பழத்தோல்,
2 ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய் விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here