மஞ்சள் காமாலை நோயினை குணமாக்குவது எப்படி?

0
312
மஞ்சள் காமாலையைக் குணமாக்க தும்பை இலை, மஞ்சள் காிசலாங்கண்ணி, கீழாநெல்லி போன்றவற்றை சம அளவில் எடுத்து அம்மியில் நன்கு விழுது போல் அரைத்து, இதனை பொியவா்களுக்கு புன்னைக்காய் அளவும், சிறியவா்களுக்கு நெல்லிக்காய் அளவும், குழந்தைகளுக்கு சுண்டைக்காய் அளவும் எடுத்து காலையும், மாலையும் தொடா்ந்து பத்து நாட்களுக்கு கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும். இந்த மருந்து சாப்பிடும் நேரத்தில் பத்தியம் காப்பது முக்கியமாகும்.
மஞ்சள் காமாலைக்கு மருந்து உண்ணும் போது காரம், புளி, அசைவம், எண்ணெய் போன்றவைகளை தவிா்ப்பது நல்லது.
பொதுவாகவே காரம், புளி, உப்பு சற்று குறைவாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
மஞ்சள்காமாலை சமயத்தில் பால் சாதம், மோா்ச் சாதம், தயிா் சாதம் ஆகியவைகளை உப்பு சோ்க்காமல் சாப்பிட வேண்டும்.
சீந்தில் சா்க்கரையை இடையிடையே சோ்ப்பதன் மூலம் இந்நோயினை குனப்படுத்த முடியும்.
எலுமிச்சை பழச்சாறை, ஆறிய வெந்நீரில் கலந்து பருகி வர நோய் குணமாகும்.
தினமும், இளநீர் அருந்தி வந்தால் இரத்தம் ஓட்டம் அதிகமாகி செய்து தாதுக்களில் ஏற்படும் விஷத்தன்மையைப் போக்குகிறது. மேலும் தினமும் பழ வகைகள், வெள்ளாிக்காய் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் ஆகும்.
பொதுவாக வெள்ளாிப்பிஞ்சு கிடைக்கும் காலத்தில் சாப்பிட்டு வந்தால் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here