கணினிகளிடமிருந்து உங்கள் கண்களை எவ்வாறு பாதுகாப்பது ?

0
135
கண்கள் மனிதன் உறுப்புகளில் மிக முக்கியமான அங்கம். இன்றைய தலைமுறை மக்கள் கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை மிக அதிகமாக, மிகவும் நெருக்கமாக பயன்படுத்தி வருகின்றனர்.

கணினி நாம் பயன்படுத்தும்போது நாம் அடிக்கடி கண் சிமிட்டுவதை மறந்து விடுகிறோம். இதேபோல் தொடர்ந்து இருந்தால் நமக்கு பிற்காலத்தில் கண் சம்மந்தமான பிரச்சினைகள் வரலாம்.
கணினியில் வேலை பார்ப்பவர்கள் இதனை கடைபிடித்தால் கண்களை பாதுகாக்கலாம். இதனை “20 – 20 – 20” என்று கண் மருத்துவர்கள் அழைக்கின்றனர். 
பயிற்சி 1
ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை கணினி திரையை தவிர்த்து வேறுஓர் பொருளை காண வேண்டும், அப்பொருள் குறைந்தது 20 அடி தூரமாவது இருக்கவேண்டும். இதனால் கண்களின் குவி பார்வை திறன் அதிகரிக்கும் மேலும் வறண்ட கண்கள் ஈரமாகும்.
பயிற்சி 2
கண்களை ஒரு 20 முறை தொடர்ந்து சிமிட்ட வேண்டும், இதனால் கண்கள் மிக ஈரமாகும். கண் குளிர்ச்சி பெரும்.
பயிற்சி 3
ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை, ஒரு 20 அடி நடந்தால் உடம்பில் ரத்த ஓட்டம் சீராகும் மேலும் கண்ணுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
சில பொதுவான கண் பாதுகாப்பு முறைகள் 
  • பால், முட்டை, கீரை, பழங்கள் போதுமான அளவு சாப்பிட வேண்டும்.
  • போதிய வெளிச்சத்தில் எழுதுதல் மற்றும் படித்தல் வேண்டும்.
  • நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்யவும்.
  • முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here