22 மார்., 2018

ஆரோக்கிய உணவுகளில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்

உடல் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை நாம் தேடி தேடி உண்டு வருகிறோம்.

ஆரோக்கியமான உணவுகள் என நாம் நினைக்கும் அந்த உணவுகளே நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தினால்?

ஆம், நாம் உட்கொள்ளும் சில ஆரோக்கியமான உணவுகளில் கூட சிறு, சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

பாதாம் பால்


பாதாம் பால் அருந்துவது உடலுக்கு நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். பாதாம் பாலில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது உண்மை தான்.

ஆனால் பெரும்பாலான பாதாம்பாலில் கடற்பாசியில் இருந்து எடுக்கப்பட்ட Carrageenan என்ற பொருள் கலக்கப்படுகின்றன. இது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கிரீன் டீ

காபி, டீ, அருந்துவது தான் உடலுக்கு கேடு, கிரீன் டீ அருந்துவது உடலுக்கு நல்லதுதான் என நீங்கள் கூறலாம்.

கிரீன் டீயில் புற்றுநோயை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் அடங்கியுள்ளன என்பது மறுப்பதற்கு இல்லை.

ஆனால் கீரின் டீயில் உள்ள காபின்கள் ஒரு சிலருக்கு வயிற்று பிரச்சனையை ஏற்படுத்தும்.

காய்கறிகள்

ப்ராக்கோலி, காலிப்ஃபிளவர், கீரைகள் போன்றவை சிறந்த சத்துகள் நிறைந்தவை. அன்றாட உணவுகளில் தவிர்க்க கூடாதும் ஆகும்.

எனினும் இந்த காய்கறிகளில் எளிதில் ஜீரணமாகாத Raffinose என்ற சர்க்கரை அடங்கியுள்ளது.

இது வாயு தொல்லையை ஏற்படுத்தும். இதற்கு சிறந்த வழி அந்த காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவதுதான்.

காய்ந்த பழங்கள்

தீரட்சை, பேரிச்சம் பழம் உள்ளிட்ட பழங்களில் ஏராளமான சக்கரை நிறைந்துள்ளன. இந்த பழங்கள் காய்ந்த பின்னர் அவற்றில் உள்ள சர்க்கரையின் அளவு மேலும் அதிகரிக்கும்

எனவே காய்ந்த பழங்களை உட்கொள்ளுவதால் குடலில் சர்க்கரை அதிகமாக சேரும். இதனால் வாயு தொல்லை ஏற்படும்.

ஆப்பிள்

ஆப்பிளை தினமும் உண்பது நோய் ஏற்படாமல் தடுக்க உதவும் என்று கூறுவர். ஆனால் ஆப்பிளை எதனுடன் உண்ணுகிறோம் என்பது மிக முக்கியம்

ஆப்பிளை தனியாக சாப்பிடுவதே சிறந்தது. உணவுடன் ஆப்பிளை உட்கொள்ளுவது வீக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சோளம்

சோளத்தில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் ஆகியவைகள் அதிகமாக உள்ளன. எனினும் இவற்றை அளவுடனேயே உட்கொள்ளவேண்டும்.

சோளத்தில் உள்ள செல்லுலோஸ் என்ற நார்ப்பொருள் எளிதில் ஜீரணமாகாது என்பதால் சில இடர்பாடு ஏற்படக்கூடும்.

சிவப்பு இறைச்சி

மாட்டுக்கறி, பன்றிக்கறி உள்ளிட்டவைகள் சிவப்பு இறைச்சி என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது. இத்தகைய கொழுப்புகள் ப்ரோட்டீன் மற்றும் கார்போஹைத்ரேட்டை விட அதிக நேரம் ஜீரணமாகாமல் வயிற்றில் இருக்கும்.

சில நேரங்களில் அந்த கொழுப்பு நமது குடலுக்கு செல்வதால் வயிறு வீங்கியது போல் தோன்றும்.

எனவே எந்த உணவாக இருந்தாலும் சரி, அதனை சரியான முறையில் உட்கொள்வதுதான் நமது உடல் நிலையை சீராகவைத்திருக்கும்.