தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

0
359

தேங்காய் தண்ணீர் சுவையானது மட்டுமல்லாமல் ஒரு சத்தான பானமும் கூட. அதை பருகுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரியுமா?

இளநீரில் உள்ளது போன்று தேங்காய் தண்ணீரிலும் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. எனினும் அவை குறித்து பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை.

தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

செரிமான பிரச்சனை தீர:
உணவு செரிமானம் ஆகாமல் அவதிப்படுபவர்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஒரு வாரம் அருந்திவந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அருந்தி வந்தால் வாயு தொல்லையில் இருந்தும் விடுதலை பெறலாம்.

உடல் எடை குறைய:
தேங்காய் தண்ணீரை அருந்துவதால் உடலில் கொழுப்புகள் சேருவது குறையும். தேங்காய் தண்ணீர் பசியையும் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

மது பழக்கம் உள்ளவர்களுக்கு:
தேங்காய் தண்ணீரை பருகினால் ஆல்கஹால் மூலம் உடலில் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.

அளவுக்கு அதிமாக மது அருந்துவதால் ஏற்படும் ஹேங்ஓவர் எனப்படும் தலைவலியையும் தேங்காய் தண்ணீர் அருந்துவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.
அதேபோல் மற்ற பானங்களை விட தேங்காய் தண்ணீரில் சக்கரையின் அளவு குறைவு என்பதால் இது ஒரு சிறந்த ’எனர்ஜி ட்ரிங்’ ஆகவும் விளங்குகிறது.

மற்ற நோய்களுக்கு:
தேங்காய் தண்ணீர் அருந்திவந்தால் இரத்த கொதிப்பையும் கட்டுப்படுத்தலாம். சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் தேங்காய் தண்ணீர் அருந்துவதால் குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கர்ப்பிணிகளும் தேங்காய் தண்ணீரை பருகி வந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அதே வேளையில் தேங்காய் தண்ணீரை அதிகமாக அருந்தக்கூடாது. அவ்வாறு அருந்தினால் உடலில் கலோரியின் அளவு அதிகரித்துவிடும் என்பதையும் கவனத்தில் வைத்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here