உடலுக்கு ஆரோக்கியம் தரும் நார்ச்சத்து!

0
197
நார்ச்சத்து உடலுக்கு இன்றியமையாத சத்துக்களில் ஒன்றாகும். புற்றுநோய், நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நார்ச்சத்து அவசியமாகும். மேலும், மனிதனின் செரிமான செயல்முறைகளுக்கு நார்ச்சத்து முக்கிய பங்காற்றுகிறது.
நார்ச்சத்து அளிக்கும் நன்மைகள்!
மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் தீவிர சுகாதார பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
கொழுப்பினை குறைக்க உதவுவதால் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ளும்போது, குளுகோஸின் அளவு அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, உடல் எடை விரைவில் குணமடைகிறது, ஆனால் பசிஎடுக்காமல் இருக்கையில் நார்ச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டாம்.
குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது, பெண்கள் ஒரு நாளைக்கு 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து எடுத்துக்கொள்வது நல்லது, ஏனெனில் இவை மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.
நார்ச்சத்து கிடைக்கும் உணவுகள்
கீரைவகைகள், பழவகைகள், வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலங்காய், முருங்கைக்காய், வெங்காயத்தண்டு, பீன்ஸ், பலாக்காய், பலாப்பழ விதை, பயறுவகைகள், ஓட்ஸ்,ப்ராக்கோலி போன்றவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here